உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பூங்கா துவக்க விழாவில் எம்.எல்.ஏ., பங்கேற்காததால் சர்ச்சை

 பூங்கா துவக்க விழாவில் எம்.எல்.ஏ., பங்கேற்காததால் சர்ச்சை

கடலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, 10 கோடி ரூபாயில் அமைய உள்ள, மருதம் பூங்கா துவக்க விழாவில் எம்.எல்.ஏ., பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலுார் மாநகர மக்களின் விருப்பத்தற்திற்கிணங்க அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகிலேயே, 20 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்க துவக்க விழா நடந்தது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. தற்போது பஸ் நிலையம் எம்.புதுாருக்கு அதாவது அமைச்சர் பன்னீர்செல்வம் தொகுதிக்கு மாற்றுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே கலெக்டர் அலுவலகம் அருகே அடிக்கல் நாட்டிய இடத்தில் மீண்டும் பஸ் நிலையம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 10 கோடி ரூபாய் செலவில் மருதம் பூங்கா துவக்க விழாவும் நடத்தப்பட்டது. அண்மையில் நடந்த இந்த விழாவில் காட்டுமன்னார்கோவிலில் இருந்து வந்து எம்.எல்.ஏ., சிந்தனை செல்வன் பங்கேற்று பேசினார். ஆனால் கூப்பிடும் துாரத்தில் இருந்தும் உள்ளூர் எம்.எல்.ஏ., பங்கேற்காததற்கு காரணம் என்ன என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்