காப்பர் கேபிள் திருடியவர் கைது
மந்தாரக்குப்பம்: நெய்வேலி, என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம், கோட்டகம் பகுதியில் உள்ள போார்வெல் பகுதியில் நேற்று மாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காப்பர் கேபிள் திருடி சென்ற வாலிபரைமடக்கி பிடித்து மந்தாரக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். விசாரணையில், அவர் உத்திரபிரதேசம், குஷிநகரைச் சேர்ந்த கவுதம், 20; என்பதும், கேபிள் திருடியதையும் ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.