உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் தரமற்ற சாலை பணி; கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு 

கடலுாரில் தரமற்ற சாலை பணி; கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு 

கடலுார்; கடலுார், திருப்பாதிரிப் புலியூரில் தரமற்ற சாலை போடப்பட்டதாக தி.மு.க., கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு நிலவியது. கடலுார், திருப்பாதிரிப்புலியூர் 26வது வார்டு எஸ்.எஸ்.நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் தரமற்ற சாலை போடப்பட்டடதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று காலை மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன் (பா.ம.க), பரணிதரன், தஷ்ணா (அ.தி.மு.க.), சக்திவேல் (பா.ஜ), ராஜலட்சுமி சங்கர்தாஸ் (வி.சி.,), ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தார் சாலை தரமில்லாதது பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தார் சாலை கையால் பெயர்த்து எடுத்து, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதுகுறித்து கவுன்சிலர் சரவணன் கூறுகையில், 'மாநகராட்சியில் மொத்தம் 38 இடங்களில் தார் சாலை அமைக்க 5.23 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அதில் சில இடங்களில் மட்டுமே சாலை அமைக்கப்பட்டது. இப்பகுதியில் அமைக்கப்பட்ட சாலை விரைவில் குண்டும், குழியுமாக மாறிவிடும். இந்த சாலை உயரமும் குறைவாக உள்ளது. பழைய சாலையில் இருந்த மண்ணைக் கூட அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர். இது குறித்து மேயர், கமிஷனர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ