மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம்
27-Jun-2025
கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், நாளை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது.இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், 2025-2026ம் கல்வியாண்டிற்கு இணைய வழியில் விண்ணப்பித்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நாளை 8ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. அன்றைய தினம் பி.எஸ்.சி., கணிதம் (தமிழ் வழி, ஆங்கில வழி), இயற்பியல், பொது வேதியியல், கணினி அறிவியல், பி.சி.ஏ., கணினி பயன்பாட்டியல், புள்ளியியல், தொழில் வேதியியல், (ஆங்கில வழி), தாவரவியல், விலங்கியல் (தமிழ் வழி, ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 9ம் தேதி பி.காம்., (ஆங்கில வழி), பி.ஏ., பொருளியல் (தமிழ் வழி மற்றும் ஆங்கிலவழி) பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல் (ஆங்கில வழி), பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
27-Jun-2025