உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு; தலைமறைவான தம்பதி 7 ஆண்டுகளுக்கு பின் கைது

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு; தலைமறைவான தம்பதி 7 ஆண்டுகளுக்கு பின் கைது

கடலுார் : கடலுாரில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், தலைமறைவான தம்பதியை, ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்த 14 மற்றும் 13வயதுடைய இரு சிறுமிகளை, விபசார கும்பல் கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது. இதுகுறித்து, திட்டக்குடி போலீசார், வழக்கு பதிந்து திட்டக்குடியை சேர்ந்த பாதிரியார் அருள்தாஸ், புரோக்கர்களாக செயல்பட்ட தனலட்சுமி, விருத்தாசலம் கலா, சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு, 2016ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, அருள்தாஸ் உள்ளிட்ட 22 பேர் மீது கடலுார் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் இருவர் உயிரிழந்தனர். அரியலுார் மாவட்டம், இடையக்குறிச்சி சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி மற்றும் ஜெபினா ஆகியோர் 2018ம் ஆண்டு தலைமறைவாகினர்.இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு 2019ம் ஆண்டு ஜனவரியில் கூறப்பட்டது. அப்போது, வழக்கில் ஆஜராகி இருந்த 17 பேரில், 16 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து, ஒருவரை மட்டும் விடுவித்தது.இதில், ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசி மற்றும் ஜெபினாவை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தேடிவந்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் ஜெபினாவை கடந்தாண்டு கைது செய்தனர். தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், கோவை, கருமத்தம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சதீஷ்குமார்,39; மற்றும் திருவண்ணாமலையில் வீட்டு வேலை செய்து வந்த தமிழரசி,38; ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்து, கடலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை