உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முந்திரி தொழிலில் நஷ்டம் தம்பதி தற்கொலை முயற்சி

முந்திரி தொழிலில் நஷ்டம் தம்பதி தற்கொலை முயற்சி

பண்ருட்டி, : முந்திரி தொழிலில் ரூ. 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன்,36; இவரது மனைவி அம்சலா,30; ஒரு மகன் உள்ளார். முந்திரி தொழில் செய்து வந்தனர். இதில், 50 லட்சம் ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தம்பதி, நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை