உள்ளூர் செய்திகள்

பசு மாடு சாவு

புதுச்சத்திரம்: கனமழை காரணமாக பசு மாடு பரிதாபமாக இறந்தது. கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பூவாலையை சேர்ந்தவர், பாவாடைராயன் மனைவி சத்யா 45; இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து, பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பெய்த தொடர் மழையின் காரணமாக, அவரது பசு மாடு இறந்தது. தகவலறிந்த கால்நடைத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !