மேலும் செய்திகள்
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
04-Nov-2026
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மா.கம்யூ., சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அரவிந்தன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன், வட்டக்குழு பாரதன் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு நிர்வாகிகள் சீனிவாசன், முத்துலட்சுமி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும்; பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்; கிடப்பில் போடப்பட்ட முக்குளம் பூங்கா அமைக்கும் பணியை விரைந்து முடிப்பது; பெண்ணாடம் பேரூராட்சியில் மின்விளக்கு, வடிகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
04-Nov-2026