உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீமுஷ்ணத்தில் பயிர் சாகுபடி பரப்பு; கணெக்கெடுப்பு பணி நிறைவு

ஸ்ரீமுஷ்ணத்தில் பயிர் சாகுபடி பரப்பு; கணெக்கெடுப்பு பணி நிறைவு

ஸ்ரீமுஷ்ணம் ; ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணெக்கெடுப்பு பணி நடந்து முடிந்தது.இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட 51 வருவாய் கிராமங்களில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணெக்கெடுப்பு பணி கடந்த 9ம் தேதி தொடங்கியது. கடலூர் வேளாண் இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமையில், குமுளூர் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆவட்டி ஜே.எஸ்.ஏ. வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பங்களிப்புடன் கணெக்கெடுப்பணி மேற்கொண்டனர்.இதில் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவில் 1 லட்சத்து ஏழாயிரத்து ஐந்து உட்பிரிவுகள் கொண்ட 9 ஆயிரத்து 702 சர்வே எண்களில் பயிர் சாகுபடி குறித்த கணெக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை