உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாடப்புத்தகம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்: 47 பேர் கைது

பாடப்புத்தகம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்: 47 பேர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தை உடனடியாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடப் புத்தகத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் டி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டிருந்தது.போலீசார் அனுமதி தராததால் நேற்று பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.செயலர் செந்தாமரைகந்தன், மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜி, கதிர்வேல், புஷ்பதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து அவர்களை கைது செய்தனர். 7 பெண்கள் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ