உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களின் நன்மதிப்பு பெற்ற கடலுார் வழக்கறிஞர் சிவமணி

மக்களின் நன்மதிப்பு பெற்ற கடலுார் வழக்கறிஞர் சிவமணி

கடலுார் சீத்தாராம் நகரில் வசிக்கும் மூத்த வழக்கறிஞர் சிவமணி, பொதுமக்களின் சேவையின் மூலம் சமூக அமைப்புகளின் விருதுகளைப்பெற்று பலரின் பாராட்டு பெற்றுள்ளார். குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிபேட்டை ஊராட்சி முன்னாள் ஊராட்சி தலைவரான இவர், வழக்கறிஞர் பணி மூலம் மக்கள் பணியை துவங்கி, கடினமான உழைப்பால் மக்களின் நம்பிக்கையையும், பேராதரவையும் பெற்று வருகிறார். புதுச்சேரி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகையை அதிக அளவில் பெற்று தருவதில் முதன்மை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த நெய்வேலியை சேர்ந்த என்.எல்.சி., ஊழியர் குடும்பத்திற்கு இவரது முயற்சியால் மக்கள் நீதிமன்றம் மூலம் 1.80 கோடி ரூபாயும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்த ஒருவரின் குடும்பத்திற்கு 1.81 கோடி ரூபாயும் இழப்பீடு வழங்க தீர்வு காணப்பட்டது. இதே போன்று, அதிகளவில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலதாமதம் இல்லாமல் உரிய தொகையை பெற்று தந்துள்ளார். இவரது ஜூனியர் வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோரும், உறுதுணையாக இருந்து பல்வேறு சிறப்பான பணிகளை திறம்படச் செய்து வருகின்றனர். ரோட்டரி சங்கத்தில் தன்னை இணைத்து பல்வேறு சமூக சேவை பணிகள், பள்ளி, கல்லுாரி கோவில்கள் என அனைத்திற்கும் சேவை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடலுார் மாவட்ட முன்னாள் காவலர் சங்கத்தில் நடத்திய பாராட்டு விழாவில் இவர் கவுரவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை