உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

விருத்தாசலத்தில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

விருத்தாசலம்:விருத்தாசலம் நகரத்தில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி திரிவதால் மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.விருத்தாசலம் பெரியார்நகர், புதுப்பேட்டை, முல்லை நகர், ராமசந்திரன்பேட்டை, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் தெருக்களில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது.குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி சென்றால் நாய்கள் துரத்தி சென்று வழிமறித்து பொருட்களை பிடிங்கி செல்கின்றன. இதனால் சிறுவர்கள் தெருக்களில் நடக்கவே அஞ்சுகின்றனர். இரவு நேரங்களிலும் இந்த நிலை தொடர்வதால் பொதுமக்கள் பல வகையில் பாதிக்கப்படுகின்றனர்.இரு சக்கரம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களையும் துரத்திச் சென்று குறைக்கின்றன. இதனால் அவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டும் நிலை உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ