உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் வீராங்கனை கேப்டனாக தேர்வு

தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் வீராங்கனை கேப்டனாக தேர்வு

கடலுார்; மசூலிப்பட்டினத்தில் நடக்க உள்ள 12வது தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணிக்கு கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தில் 12வது பீச் நேஷனல் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜுன் 5ம் தேதி முதல் ஜூன்.8ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டிக்கான தமிழக அணியில் கடலுார் உண்ணாமலைசெட்டி சாவடியைச் சேர்ந்த அஸ்வினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் அவர், தமிழக அணிக்கு கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு கபடி கழக பொதுசெயலாளர் ஷபியுல்லா மற்றும் கடலுார் மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன், செயலாளர் நடராஜன் ஆகியோர், அஸ்வினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை