243 போலீசாருக்கு இடமாறுதல் கடலுார் எஸ்.பி., உத்தரவு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 243 போலீசாருக்கு எஸ்.பி., ஜெயக்குமார் இடமாறுதல் உத்தரவு வழங்கினார். மாவட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார் முதல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வரை பணியிட மாறுதல் சம்பந்தமாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. விண்ணப்ப மனுக்கள் அளித்தவர்களுக்கு நேற்று கடலுார் ஆயுதப்படை மைதானத்தில் கவுன்சிலிங் நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, 243 பேருக்கு காரணங்களை கேட்டு கவுன்சிலிங் முறையில் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணி மாறுதல் உத்தரவு வழங்கினார். கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், ராஜா, பாலகிருஷ்ணன், விஜிகுமார், லாமேக், ராதாகிருஷ்ணன், சார்லஸ், நிர்வாக அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.