உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டி சிகிச்சைக்கு உதவிய கடலுார் எஸ்.பி.,

மூதாட்டி சிகிச்சைக்கு உதவிய கடலுார் எஸ்.பி.,

கடலுார்; கடலுார் கோண்டூர் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி கலைச்செல்வி,70. கணவர் இறந்துவிட்டார். உறவினர்கள் வெளியூரில் வசித்து வரும்நிலையில் தனியாக வசித்து வந்தார். கடந்த 18ம் தேதி, மூதாட்டிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வெளியூரில் உள்ள உறவினர்களால் வர இயலவில்லை. இந்நிலையில் கடலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு, தனது நிலையை கூறி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவி கோரினார்.எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைச்காக சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ