உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆரோக்கியமான எண்ணெய் விற்பனையில் கடலுார் எஸ்.எஸ்.ஆயில் மில் முதன்மை

ஆரோக்கியமான எண்ணெய் விற்பனையில் கடலுார் எஸ்.எஸ்.ஆயில் மில் முதன்மை

கடலுார் : கடலுார் எஸ்.எஸ்.ஆயில் மில்லில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது என, உரிமையாளர் ரவி கூறினார். இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது: வாகை மரச்செக்கு எண்ணெய்யை கடலுாரில் முதன்முதலில் அறிமுகம் செய்து பிரபலபடுத்தியது எங்கள் நிறுவனம் தான். 22000;2015 ஐ.எஸ்.ஓ.,தரச்சான்று பெற்ற நிறுவனமான எங்கள் கடையில் எண்ணெய் வாங்க கடலுார், விழுப்புரம், புதுச்சேரி, சிதம்பரம் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எண்ணெய் வகைகள் சிறப்பு தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. மேலும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கேற்றும் எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், புங்கன் எண்ணெய், கடுகு எண்ணெய், பஞ்சதீப எண்ணெய், நாட்டுப்பசு நெய் கிடைக்கிறது. இந்துப்பு, தினை, வரகு, சாமை, அரிசி வகைகளில் கருப்பு கவுனி, குதிரை வாலி, மாப்பிள்ளை சம்பா, துாயமல்லி, காட்டுயானம், கருங்குறுவை, பூங்கார் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டுமுறை தயாரிப்புகளான மஞ்சள் துாள், வடவம், இட்லி பொடி, பருப்பு பொடி, தனி மிளகாய் துாள், குழம்பு மிளகாய் துாள், சத்துமாவு, கம்பு மாவு, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு ஆகியவை தரமாகவும், சுத்தமாகவும் கிடைக்கும். ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி தொழி்ல்சார்ந்த நிபுணர்களால் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. அனைத்து நாட்களிலும் இலவச டோர் டெலிவரி வசதி உண்டு. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித்தெருவில் பிரதான கடையும், கடலுார் முதுநகர் சங்கரன் தெரு மற்றும் மஞ்சக்குப்பம் நேதாஜி தெருவில் கிளைகளும் உள்ளன. கடலுாரில் உள்ள அனைத்து மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் எஸ்.எஸ்.ஆயில் மில் எண்ணெய் வகைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை