உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில அளவிலான பாரா தடகள போட்டி கடலுார் மாணவர் முதலிடம்  

மாநில அளவிலான பாரா தடகள போட்டி கடலுார் மாணவர் முதலிடம்  

கடலுார்: காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான பாரா தடகள போட்டியில், கடலுாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். கடலுார் அடுத்த கண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாஸ்கரன், கொத்தனார். இவரது முதல் மகன் தமிழ்பாரதி, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர். ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர் கடந்த ஆக.11, 12 ம் தேதிகளில் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் நடந்த மாநில அளவிலான சப்-ஜூனியர், ஜூனியர் பாரா அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்பில் கடலுார் மாவட்டம் சார்பில், 400மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தையும் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் தமிழ்பாரதியை பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் பயிற்சியாளர் பாராட்டினர். ஆக.29ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலா பாரா அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று ஐந்தாம் இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !