உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சைபர் குற்றப்பிரிவு விழிப்புணர்வு கூட்டம்

சைபர் குற்றப்பிரிவு விழிப்புணர்வு கூட்டம்

கடலுார்: சைபர் குற்றப்பிரிவு சார்பில் கடலுார் செயின்ட் ஜோசப் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பேரில், சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., ரகுபதி தலைமையில், ஆய்வாளர் கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் கடலுார் செயின்ட் ஜோசப் பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். அதில், ஓ.டி.பி., தொடர்பான குற்றங்கள் குறித்தும் காவல் உதவி ஆப், தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், லோன் ஆப்ஸ், பகுதி நேர வேலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சைபர் கிரைம் இலவச உதவி எண்.1930 மற்றும் www.cybercrime.gov.inகுறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை