ஆற்றில் மண் அரிப்பு தடுக்க தடுப்பு கட்டை அமைப்பு
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் பாலத்தின் அடியில் மண் அரிப்பை தடுக்க தடுப்பு கட்டை அமைக்கும் பணிகள் நடந்தது.நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் உள்ள கெடிலம் ஆற்றில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. புதிய பாலம் மற்றும் பழையபாலம் அடியில் மழைகாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் வலுவிழக்காமல் இருக்க, பழைய பாலத்தின் அடியில் தடுப்பு கட்டை கட்டும் பணிகள் துவங்கி உள்ளது.பழைய பாலத்தின் இருபுறமும் மழை வெள்ளத்தின் வேகத்தை தடுக்கும் விதத்தில் தடுப்பு கட்டைகள் கட்டி, கருங்கற்கள் பரப்பும் பணிகள் நடக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தற்போது, தடுப்பு கட்டைகள் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.