உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடம்பவனேஸ்வரர் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்

கடம்பவனேஸ்வரர் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்

சேத்தியாத்தோப்பு: எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோவிலில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தரிசனம் செய்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலாம்பிகை உடனுறை பானுகோடீஸ்வரர் கோவில், வேதநாராயணபெருமாள் சமேத அம்புஜவல்லி தாயார் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இக்கோவில்களை பார்வையிட்ட தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், கோவில் திருப்பணிக்கு நிதியுதவி அளிப்பதாக கூறினார். தொடர்ந்து, எறும்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்யாண சுந்தரி உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு அறங்காவலர் குழு நிர்வாகி சவுந்தரராஜன் வரவேற்றார். பின், சுவாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ