மகள் மாயம்; தந்தை புகார்
புதுச்சத்திரம்; மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையை சேர்ந்தவர் செல்வமணி மகள் ரத்திகா, 20; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று அதிகாலை வீட்டை விட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து செல்வமணி அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.