உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கீழணைக்கு தண்ணீர் திறந்து விட டெல்டா விவசாயிகள் கோரிக்கை

கீழணைக்கு தண்ணீர் திறந்து விட டெல்டா விவசாயிகள் கோரிக்கை

சிதம்பரம்: கடலுார் மாவட்ட டெல்டா பாசன பகுதியில், நெற்பயிர்கள் கருகுவதால், கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாய சங்கத்தினர் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்க தலைவர் இளங்கீரன் விடுத்துள்ள அறிக்கை:கீழணை பாசனத்தின் மூலம், கடலுார் மாவட்ட டெல்டா பாசன பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் சுமார் 1.10 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால், இந்த ஆண்டு, கீழணைக்கு தண்ணீர் போதுமான அளவில் இல்லை. இதனால், இப்பகுதியில் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.பாசனத்திற்காக மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவில், 10 சதவீதம் கல்லணையில் இருந்து கீழணைக்கு தர வேண்டும்.ஆனால் கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் போதுமான அளவில் கொடுப்பதில்லை. விவசாய சங்கம் சார்பில் தொடர்ந்து முறையிட்டும், தண்ணீர் வந்த பாடில்லை.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பாசன பகுதியில் தற் போது, பல இடங்களில் சாகுபடி துவங்கியுள்ளது.அதேபோன்று நேரடி நெல் விதைப்பு செய்துள்ள பயிர்கள் பல இடங்களில் காய்வதுடன், வளர்ந்துள்ள பயிரில் தண்ணீர் வைத்து களை எடுக்க வேண்டியுள்ளது.இதே நிலை நீடித்தால் பயிர் முற்றிலும் கருகிவிடும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக கடலுார் கலெக்டர், கீழணைக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தரநடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை