உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஜனநாயக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

 ஜனநாயக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில், ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில், கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில அமைப்பாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நீர் மேலாண்மை விவசாயிகள் சங்கம் சுரேஷ், மாவட்ட பாரம்பரிய விவசாயிகள் சங்க தலைவர் சக்திவேல், செயலர் பாலகிருஷ்ணன், மக்கள் விடுதலை மாநில பொதுச்செயலர் விடுதலைக்குமரன், மாநில துணை பொதுச் செயலர் ராமர்,நிர்வாகிகள் வேணுகோபால், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். நகரத்தில் உள்ள விவசாய நிலங்களை தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் இணைத்து அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் துறை நலத்திட்டங்களை வழங்க வேண்டும். வயலுார், ஏனாதிமேடு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் கட்டித்தர வேண்டும். என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு நிதியில் வயலுார் ஏரியை துார்வார வேண்டும். விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட விவசாயிகளுக்கு பி.எம்., கிசான் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை