பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம்; இந்து மக்கள் கட்சியினர் கைது
நடுவீரப்பட்டு ; பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேவா தலைமை தாங்கினார்.அமைப்பு பொதுசெயலாளர் ஜம்புலிங்கம்,மாவட்ட செயலாளர் கார்த்தி,செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்பினரையும், அதன் நிர்வாகிகளை மிரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் பொய் வழக்குகளை போடுவதும்,மாநில இளைஞரணி நிர்வாகி ஓம்கார் பாலாஜி மீது உள்நோக்கத்தோடு பொய் வழக்குகளை போடும் தமிழக காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 10 பேரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.