மேலும் செய்திகள்
துாய்மை தொழிலாளர் 110 பேருக்கு சீருடை
23-Oct-2024
விருத்தாசலம்: வடகிழக்கு பருவமழையொட்டி, விருத்தாசலம் நகராட்சியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணிகள் நேற்று நடந்தது.இந்த பணிகளை, நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துப்புரவு அலுவலர் சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், களப்பணி உதவியாளர் செங்குட்டுவன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.இதில், நகராட்சி பகுதியில் உள்ள டயர் கடைகள், இரும்பு கடைகள் மற்றும் வீடுகள் தோறும் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து, தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறபடுத்தினர்.மேலும், டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா என வீடுகள் தோறும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
23-Oct-2024