உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி 

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி 

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த புலிவலத்தில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு பணி முகாம் நடந்தது. இ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த பணிக்கு, மருத்துவ அலுவலர் சுரேந்தர் தலைமை தாங்கினார். இதில், நடமாடும் மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், மணிகண்டன், மதனகோபால், செவிலியர் பிரியதர்ஷினி . களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுவினால் பரவும் நோய்கள் குறித்தும், தடுக்கும் வழிமுறைகள், குடிநீரில் குளோரினேஷன் ஆய்வு, காய்ச்சல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு, கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !