உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.7 கோடியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் கணேசன் பெருமிதம்

ரூ.7 கோடியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் கணேசன் பெருமிதம்

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதுார் ஊராட்சியில் திட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு மற்றும் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.விருத்தாசலம் சப் கலெக்டர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக சிகாமணி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கணேசன் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், அவர் பேசுகையில், 'எஸ்.புதுார் ஊராட்சியில் தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் சிமென்ட் சாலை, குடிநீர் திட்ட பணிகள், மகளிர் உரிமைத் தொகை, தனி நபர் கழிவறை, கான்கிரீட் வீடுகள், இணைப்பு சாலைகள், பயணியர் நிழற்குடை, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் 7 கோடி ரூபாய் மதிப்பில் நடந்தன' என்றார். கூட்டடத்தில் மங்களூர் ஒன்றிய தி.மு.க.,செயலாளர் சின்னசாமி, முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், ஒன்றிய துணை செயலாளர் ராமதாஸ், நிர்வாகிகள் நிர்மல், வெங்கடேசன், தேவேந்திரன், ஞானசேகர், ராஜேந்திரன், தங்கதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி