மேலும் செய்திகள்
பள்ளியில் திருட்டு
24-Sep-2024
ராமநத்தம்: ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார்.ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மிட்டல் நேற்று ஆய்வு செய்தார். அதில், ஸ்டேஷன் வருகை பதிவேடு, எப்.ஐ.ஆர்., புத்தகம், நிலுவையில் உள்ள வழக்கு விபரம், போலீஸ் குடியிருப்பு விபரம் குறித்து ஆய்வு செய்தார். போலீசாரின் பணி விபரங்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.அப்போது, திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன், ராமநத்தம் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
24-Sep-2024