உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அணைக்கட்டு பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகள் தீவிரம்

அணைக்கட்டு பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகள் தீவிரம்

விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால் மேமாத்துார் பாசன வாய்க்கால் துார்வாரும் பணி துவங்கியது.விருத்தாசலம் அடுத்த மேமாத்துார் அணைக்கட்டிலிருந்து மணிமுக்தாறு வழியாக வரும் மழைநீர் கொடுக்கூர் பெரிய ஏரி, சித்தேரி, சின்னக்குட்டி உடையார், பெரம்பலுார், பரவளூர், தொரவளூர், சாத்துக்கூடல், கோமங்கலம் உட்பட 15 கிராம ஏரிகளுக்குச் சென்று நீர்ப்பிடிப்பு கிடைக்கிறது.இதன் மூலம் 4,500 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்றன. மேலும், ஏரிகளில் நீர்ப்பிடிப்பு இருப்பதால் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து போர்வெல் பாசனம் செயல்பட்டன. மேலும், மேல்நிலை தொட்டிகளுக்கு எளிதில் நீரேற்றி, குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், அணைக்கட்டு பாசன வாய்க்காலில் சம்பு, கோரை புற்கள், கருவேல மரங்கள், காட்டாமணி செடிகள் அதிகளவு மண்டி துார்ந்தது. இதனால் தண்ணீர் வழிந்தோட வழியின்றி, ஆங்காங்கே தேங்கும் அவலம் உள்ளது. மேலும் அணைக்கட்டில் இருந்து வரும் தண்ணீர் ஆங்காங்கே சாலையில் வழிந்தோடி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் விரிவாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை மூலம் துார்வாரும் பணி துவங்கியது. அதன்படி, மணவாளநல்லுார் புறவழிச்சாலை வழியாக செல்லும் பாசன வாய்க்காலை ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் துார்வாரும் பணி தீவிரமாக நடக்கிறது.இதனால் பருவமழைக்கு கிடைக்கும் தண்ணீர் கடைமடை வரை செல்லும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ