பழுதடைந்த ரேஷன்கடை : புதிய கட்டடம் கட்டப்படுமா?
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டில் பழுதடைந்த ரேஷன்கடை கட்டடத்திற்கு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நடுவீரப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் விலங்கல்பட்டில் ரேஷன்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விலங்கல்பட்டு,குழந்தைக்குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்த கடையின் கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் ரேஷன்கடை பக்கத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில் இயங்கி வருகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த ரேஷன்கடை கட்டடத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.