உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேணுகோபாலபுரம் அரசு பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

வேணுகோபாலபுரம் அரசு பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

கடலுார்: புதுச்சேரி தினமலர்- பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து கடலுார், மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்திய பதில் சொல், பரிசு வெல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.புதுச்சேரி 'தினமலர்- பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து கடலுார், மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதில் சொல், பரிசு வெல் வினாடி வினா போட்டி நடத்தியது. போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16 மாணவிகளை தேர்வு செய்து 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று நடந்தது.போட்டியில் 8ம் வகுப்பு மாணவிகள் மதுமிதா, கீர்த்தனா அணி முதலிடம், 7ம் வகுப்பு மாணவிகள் ஷர்மிளா, சஜிதா அணி இரண்டாமிடம் பிடித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை தனலட்சுமி, தலைமை தாங்கி, போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை