உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தினமலர் வித்யாரம்பம் நிகழ்ச்சி விருத்தாசலத்தில் அக். 2 ம் தேதி நடக்கிறது

தினமலர் வித்யாரம்பம் நிகழ்ச்சி விருத்தாசலத்தில் அக். 2 ம் தேதி நடக்கிறது

விருத்தாசலம் : 'தினமலர்' நாளிதழ் மற்றும் விருத்தாசலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான 'அ, ஆ' எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, வரும் 2ம் தேதி நடக்கிறது. 'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் விருத்தாசலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து, கல்வி சாலைக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் இளந்தளிர்கள், சரஸ்வதி தேவியின் அருள் பெற, விஜயதசமி திருநாளில், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்துகிறது. கல்வியில் சாதனை படைத்து பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் முக்கிய பிரமுகர்கள் மடியில், உங்களது செல்ல குழந்தைகளை அமர வைத்து பிஞ்சு விரல்களை பிடித்து 'அரிச்சுவடியை ஆரம்பித்து' வைக்கும் சிறந்த தருணமிது. விருத்தாசலம், ஆலிச்சிகுடி சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் அக்., 2ம் தேதி வியாழக்கிழமை, காலை 9:00 முதல் 11:00 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால், முன்பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். தங்களது குழந்தைகள் எழுதும் முதல் எழுத்தின் அழகிய தருணத்தை புகைப்படம் எடுத்து, உடனடியாக புகைப்படத்துடன் கூடிய 'தினமலர்' சான்றிதழ் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரிசாக வழங்கப்படும். கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க உங்க செல்ல குட்டீஸ்களை முன்பதிவு செய்து அழைத்து வாருங்கள். முன்பதிவு அவசியம் இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுக் குட்பட்ட குழந்தைகளை, வித்யாரம்பம் நிகழ்ச்சி யில் பங்கேற்க செய்யலாம். இதற்கு, 9944400783 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில், காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொண்டு குழந்தையின் பெயர், வயது, பெற்றோர் பெயர் மற்றும் முகவரியை குறுஞ்செய்தி அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !