உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ம.புடையூர் பள்ளியில் சைக்கிள் வழங்கல்

ம.புடையூர் பள்ளியில் சைக்கிள் வழங்கல்

ராமநத்தம் : ஆவட்டி அடுத்த ம.புடையூர் அரசு ஆதி திராவிடர் மேல்நிலை பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, அரசு ஆதி திராவிடர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் தலைவர் சக்திவேல், துணை செயலர் ரீகன்குமார், இணை செயலர் காசி கணேசன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.ஆசிரியர்கள் ஜெயா, சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த 17 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை