உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, கண்காணிப்பு அலுவலர் மோகன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கடலுார் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் பேசுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கலாம். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன், தங்களது துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், பயிற்சி கலெக்டர் ஆகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி