உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

விருத்தாசலம்: மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. பாரதியார்தினம் மற்று ம் குடியரசு தினத்தை முன்னிட்டு, கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, 11 குறுவட்டங்களில் பூ பந்து, இறகுபந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டன. முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 16, 17 ஆகிய இரண்டு தேதிகளில் நடந்தது. தொழுதுார் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடந்த போட்டியினை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், தலைமை ஆசிரியர் வினோத்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர் . தொழுதுார் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் அருள், ராஜராஜசோழன், மனோகர், பிரகாசம் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். 16ம் தேதி மாணவிகளுக்கும், நேற்று மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. 14, 17, 19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.இதில், முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறு வர். திருவண்ணாமலையில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும், ராணிப்பேட்டையில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும், திருச்சியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் மாநில அளவில் போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை