உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட வாலிபால் போட்டி; பண்ருட்டி மாணவர்கள் முதலிடம்

மாவட்ட வாலிபால் போட்டி; பண்ருட்டி மாணவர்கள் முதலிடம்

பண்ருட்டி: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடந்தது. இதில், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று விளையாடி, முதலிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜாகீர் உசேன், பள்ளி தலைமையாசிரியர் ஆலமர்செல்வம் ஆகியோர் பாராட்டினர்.இதில் மேலாண்மை குழு உறுப்பினர் சண்முகவள்ளிபழனி, பள்ளி துணைத் தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி