தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது.நகர செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் முசாதிக் அலி முன்னிலை வகித்தார். இளைஞரணி செயலாளர் அனீஸ்குமார் வரவேற்றார். பேச்சாளர்கள் கோபிநாத், முல்லைவேந்தன் ஆகியோர் தமிழக அரசின் சாதனைகள் பற்றி பேசினர்.தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், நகர துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதிகள் வேலு, கதிரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அப்துல் ரஜாக், ராஜா, சக்திதாசன், விமல்ராஜ், அஜித்குமார், தொழில்நுடப அணி தமிழன் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.