உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., மாநாடு ஒரு குடும்ப நிகழ்ச்சி மாஜி., அமைச்சர் சம்பத் பேட்டி

தி.மு.க., மாநாடு ஒரு குடும்ப நிகழ்ச்சி மாஜி., அமைச்சர் சம்பத் பேட்டி

கடலுார் : சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞரணி மாநாடு ஒரு குடும்ப நிகழ்ச்சி என, முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார்.எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, கடலுார் வண்டிப்பளையத்தில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத் கொடியேற்றி எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து கொண்டங்கி ஏரி பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.அப்போது அவர் கூறுகையில், தி.முக., இளைஞரணி மாநாட்டில் தொண்டர்கள் கூட்டம் இல்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும் வரவேற்பு இல்லாத கூட்டமாக உள்ளது. தி.மு.க., இளைஞரணி மாநாடு ஒரு குடும்ப நிகழ்ச்சி என கூறினார். கடலுார் முதுநகர் பகுதி செயலாளர் கந்தன், சேவல்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்