உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்

தி.மு.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய தி.மு.க., பிரமுகர் பா.ஜ.,வில் இணைந்தார். திட்டக்குடி சட்டசபை தொகுதியில், சிறுபாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வராசு. மங்களூர் தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாக இருந்தார். இந்நிலையில், தி.மு.க.,விலிருந்து விலகி நேற்று கடலுார் பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழழகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது, கடலுார் பா.ஜ., மாவட்ட பொதுச் செயலர்கள் அகத்தியர், ராகேஷ், சின்னதுரை, மாவட்ட துணைத் தலைவர் அர்ச்சனா ஈஸ்வரன், மாவட்ட செயலர்கள் சிலம்பரசன், நாகராஜ், கவுன்சிலர் கொளஞ்சி, விவசாய அணி மாவட்ட தலைவர் குமரேசன், நிர்வாகிகள் சேனாதிபதி, பாலு, ராஜா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை