மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
23-Aug-2025
நெய்வேலி : நெய்வேலியில் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நெய்வேலி தொகுதி பார்வையாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலைக்குழு மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான நிர்வாகிகள் புதுப்பித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், தலைவர் நன்மாறபாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார், தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் ஆடலரசன், ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
23-Aug-2025