உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துணையற்ற நிலையில் தி.மு.க., மூத்த அமைச்சர்கள்

துணையற்ற நிலையில் தி.மு.க., மூத்த அமைச்சர்கள்

கடலுார்: ''தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் துணையற்ற நிலையில் உள்ளனர்'' என, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். கடலுாரில், அவர் கூறியதாவது:பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டில் மிருக கொழுப்பு கலந்தவர்கள் யார் என கண்டுபிடிக்க வேண்டும். உதாயநிதி, துணை முதல்வராக வருவதற்கு வாழ்த்துக்கள். அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. அதே சமயத்தில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதிக்கு துணையாக நின்று, இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கும் துணையாக நிற்கும் பல மூத்த அமைச்சர்கள் துணையற்ற நிலையில் உள்ளனர் என்பதை தி.மு.க., கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ