மேலும் செய்திகள்
முற்றுகை..
24-Jan-2025
விருத்தாசலம் : கம்மாபுரம் ஒன்றியத்தில் பணித்தள பொறுப்பாளர்களை நியமித்த தி.மு.க., நிர்வாகிக்கு பேனர் வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் ஏரி, குளங்கள், வடிகால் சீரமைப்பு மற்றும் மண் சார்ந்த வேலைகளில் கிராம மக்கள் ஈடுபடுகின்றனர். அனைவருக்கும் வேலை கிடைக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்படுகிறது. மேலும், அந்தந்த பணியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.இதனை சரிபார்க்கும் பணியில் பணித்தள பொறுப்பாளர் என்ற அதிகாரி பணியில் இருப்பார். அவரே வேலை வழங்குவது, சரிபார்ப்பு, ஊதியம் போன்ற பணிகளை கவனிக்கிறார். பஞ்., தலைவர்கள் பதவிக்காலம் முடிந்து, பி.டி.ஓ.,க்கள் மேற்பார்வையில் இருந்தாலும், தேசிய ஊரக வேலை திட்டப் பணிகள் பணித்தள பொறுப்பாளர் கட்டுப்பாட்டில் இருக்கும்.இதனால், பணித்தள பொறுப்பாளர்களை தங்களுக்கு வேண்டிய நபர்களை நியமிக்கும் வேலையில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தீவிரம் காட்டினர். இதன் மூலம் ஊராட்சிகளில் குறிப்பிட்ட நிதியை மாதந்தோறும் கமிஷனாக பெற முடிவு செய்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டப்பட்டது.இதனை நிரூபிக்கும் வகையில், கம்மாபுரம் ஒன்றியம் கார்குடல் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர்கள் நியமனத்திற்காக, அமைச்சர் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளருக்கு நன்றி அறிவிப்பு பேனர், விருத்தாசலம் - பரங்கிப் பேட்டை நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் திட்டப் பணிக்கு, தி.மு.க., நிர்வாகிக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
24-Jan-2025