உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., முப்பெரும் விழா; மா.செ., அழைப்பு

தி.மு.க., முப்பெரும் விழா; மா.செ., அழைப்பு

சிறுபாக்கம்; கரூரில் நடக்கும் தி.மு.க.,வின் முப்பெரும் விழாவில் பங்கேற்க கட்சியினருக்கு கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் உத்தரவின்படி, தி.மு.க., முப்பெரும் விழா கரூரில் இன்று 17ம் தேதி நடக்கிறது. அதில், கடலுார் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் எம்.எல். ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், நகர, பேரூராட்சி, ஒன்றிய, வார்டு, கிளை செயலர்கள் உட்பட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை