கடலுார் மாநகரில் முற்றும் தி.மு.க., - வி.சி., மோதல்
க டந்த மாதம் 17ம் தேதி, தென்பெண்ணையாற்று பாலத்தின் சுவரில் விளம்பரம் எழுதுவதில் நகர தி.மு.க.,வுக்கும், வி.சி., கட்சினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர் கொடுத்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த நாளே கடலுார் மாநகர போலீசை கண்டித்து நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய வி.சி., நிர்வாகிகள் போலீசாரைப் பற்றி ஆவேசமாக பேசியதுடன் 'யார் சொல்லி நீங்கள் செய்கிறீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும்' என மறைமுகமாக தி.மு.க.,வை சாடினர். பொதுத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில், கூட்டணி கட்சியான வி.சி., கட்சியுடன் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த பிரச்னை மற்ற இடங்களிலும் பரவி வருகிறது. சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., யாக உள்ள நிலையில், இம்மாவட்டத்திலேயே மோதல் போக்கு என்றால் தேர்தல் நேரத்தில் எப்படி சமரசமாக சென்று ஓட்டு சேகரிப்பது என இரு தரப்பை சேர்ந்த கட்சியினரும் கவலையில் உள்ளனர்.