உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லேப்டாப் இருந்த மாணவர்களின் கையில் கஞ்சா உள்ளது தான் தி.மு.க.,வின் சாதனை: பாண்டியன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

லேப்டாப் இருந்த மாணவர்களின் கையில் கஞ்சா உள்ளது தான் தி.மு.க.,வின் சாதனை: பாண்டியன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

சிதம்பரம், ஜன. 27 -சிதம்பரம் அண்ணாமலை நகரில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிபேர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாணவரணி செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முருகையன் வரவேற்றார். உத்திராபதி, ரவிசந்திரன், கார்த்திக் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பு செயலாளர் காந்தி, தலைமை பேச்சாளர் மணி, மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்று பேசினர். எம்.எல்,ஏ., பாண்டியன் பேசுகையில், , மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, லேப்டாப் வழங்கினார். லேப்டாப் வைத்திருந்த மாணவர்கள் கையில், தி.மு.க., ஆட்சியில் 'கஞ்சா' வைத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அரசால் என்றைக்கும், மதுக்கடைக்களை மூட முடியாது. ஏன் என்றால் மதுபான ஆலைகளை நடத்துவதே தி.மு.க.,வினர் தான். ஸ்டாலின் சகோதரி கணிமொழி, ஜெகத்ரட்சகன், அமைச்சர் ராஜா உள்ளிட்ட அனைவரும் மதுபான ஆலைகள் நடத்தி வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை, அ.தி.மு.க., ஆட்சியில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரிய மருத்துவமனையாக தரம் உயர்த்தி, எம்.ஆர்.ஐ., மற்றும் சி.டி. ஸ்கேன் கருவிகள் வழங்கப்பட்டது எனப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை