மேலும் செய்திகள்
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
08-Oct-2025
பரங்கிப்பேட்டை: அக். 19-: பா.ஜ., புவனகிரி சட்டசபை தொகுதி பொறுப்பாளராக, கடலுார் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் அர்ச்சனா ஈஸ்வர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார். புவனகிரி சட்டசபை தொகுதிக்கு, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஜி, பெருங்கோட்ட பொறுப்பாளர், மாநிலச் செயலாளர் வினோஜ் ப செல்வம், கடலுார் மேற்கு மாவட்ட தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழழகன் ஆகியோர் பரிந்துரையின் பேரில், புவனகிரி சட்டபை தொகுதி பொறுப்பாளராக டாக்டர் அர்ச்சனா ஈஸ்வரை, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளார். டாக்டர் அர்ச்சனா ஈஸ்வருக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
08-Oct-2025