உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் டாக்டர் கலைக்கோவன் வேண்டுகோள்

பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் டாக்டர் கலைக்கோவன் வேண்டுகோள்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் புதிய நுரையீரல் வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, கடலுார் மஞ்சக்குப்பம் கோவன்ஸ் நுரையீரல் சிறப்பு சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன் கூறினார். அவர் கூறியதாவது; கடலுார் மாவட்டத்தில் தற்போது நுரையீரலில் புதுவிதமான வைரஸ் பரவி வருகிறது. முன்பெல்லாம் நுரையீரலில் தொற்று ஏற்பட்டால் 4 நாட்களில் சரியாகிவிடும். ஆனால், தற்போது புதுவிதமான வைரஸ் தொற்றால் வறட்டு இருமல் மற்றும் மூச்சு திணறல் குறைந்தபட்சம் 15 நாள் முதல் 20 நாட்கள் வரை இதனுடைய பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் ஏராளமான மருத்துவ பயனாளிகள் இதுபோன்ற பாதிப்புகளால் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தொடர்ந்து பாதிப்புகள் குறையாத நிலையில் 'சிடி' ஸ்கேன் மூலமாக பரிசோதனை செய்யும்போது இந்த பாதிப்பு தெரிய வருகிறது. எனவே, ரசாயன தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். இது போன்ற பாதிப்புகள் கூட்ட நெரிசல், பருவநிலை மாற்றம் மற்றும் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாதது போன்றவற்றால் ஏற்படுவது போல் தெரிகிறது. பொதுமக்கள் அவசியம் இன்றி கூட்டங்களில் கூடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி