உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு

 வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு

கடலுார்: மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பில் உள்ளதால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து விடும் அவலம் உள்ளது. கடலுார், சிவானந்தபுரம் வெள்ளி விநாயகர் கோவில் பின்புறம் மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. 20க்கு அடிமேல் இருந்த வடிகால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை