ஆலம்பாடியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்
புவனகிரி; ஆலம்பாடியில் தேங்கிய மழை தண்ணீரை பாதுகாப்பு காரணம் கருதி, வருவாய்த்துறையினர் பைப் லைன் அமைத்து வெளியேற்றினர்.கன மழை காரணமாக புவனகிரி அடுத்த ஆலம்பாடியில் தேங்கிய தண்ணீர் வடிய வழியில்லாமல் குளம் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு களை சூழ்ந்தது. இதனால், குடியிருப்பு பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. தகவலறிந்து பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட புவனகிரி தாசில்தார் கணபதி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், மேல்புவனகிரி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லெனின் உள்ளிட்ட கிராம மக்கள் உதவியுடன் குளம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, சாலையின் குறுக்கே பைப் லைன் அமைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலை மூடப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.