மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோயில் ஊர்வலம்
05-Apr-2025
திருக்கல்யாணம்
12-Mar-2025
முஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் மங்காங்குளத்தெரு திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மார்ச் 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருக்குளத்தில் இருந்து அக்னி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவில் முன்புறம் உள்ள தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.பின், மஞ்சள் நீராட்டு மற்றும் பட்டாபிேஷகம் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தங்க ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
05-Apr-2025
12-Mar-2025